
யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட லலிதா துரைராஜா அவர்கள் 03-08-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் செல்லாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரைராஜா வைத்திலிங்கம்(நீர்வேலி) அவர்களின் பாசமிகு துணைவியும்,
அனுஜா, மயூரன்(கனடா) ஆகியோரின் ஆசைமிகு தாயாரும்,
ராதா, வசந்தா, சுகிர்தா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அருள்முரளி(வைத்திய நிபுணர்), சுவர்ணா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அருளானந்தம், சண்முகநாதன் தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,
அன்பன், அகலிகா, இரமணன், இன்பன், துளசி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
அருள்விபூஷன், அருள்நிமேஷிக்கா, வளவன், எயிடன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-08-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 8:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.