![](https://cdn.lankasririp.com/memorial/notice/221995/d9a180fc-035e-4e87-86e9-919f2b9f0f96/23-64cea17f40e68.webp)
![](https://cdn.lankasririp.com/memorial/profile/221995/bc94cba6-bc28-4d36-a578-cfb3c5ce5957/23-64cea17ecdb8e-md.webp)
திதி:20/08/2024
பிரித்தானியா Ickenham ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த லக்ஷ்னா ஞானசேகரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பாய் பண்பாய் பாசமாய்
எங்களை அரவணைத்த அன்புத் தெய்வமே
உங்கள் பிரிவின் இடைவெளி
ஒரு வருடம் ஆகியதோ!
நம்ப முடியவில்லையம்மா உங்கள் இழப்பை
உங்கள் உருவத்தை நாம் இழந்தோமன்றி
நின் உயிர் எம்மோடுதான் இருக்குதம்மா..!
வாழும் போதும் எம் வழிகாட்டி நீ
வானுலகில் இருந்தும் வழிகாட்டு நீ
எமக்குமீண்டும் நீ வரவேண்டும் எம் குடும்பத்தில்
என்றும் காத்திருப்போம் உன் வரவுக்காய்!
ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எமக்கு மகளாகப் பிறந்திடவே
நாம் ஏங்குகிறோம் மகளே!!
அணையா தீபம் அணைந்ததேனோ?
எங்கள் அன்புச் செல்வம் மறைந்ததேனோ?
பாசமுள்ள மகளே எம்மை பரிதவிக்க விட்டு
பறந்து நீ சென்றதும் ஏனோ?
உனை அணைத்துக் கொள்ள
உன் உறவுகள் நாமிருக்க
உனை எமன் ஏந்தினானோ தன் கரம்
வானுயுரத்தில் நீ இருந்தாலும்
நீயின்றி நாமிங்கு நிம்மதியின்றித் தவிக்கின்றோம்
விடைதெரியா வேதனைக்கு விடை காணத் துடிப்பதே
எங்கள் வேதனையாயிற்று ஏனிந்த வேதனை
எங்கள் வாழ்வில் வந்த சோதனை
எத்தனை காலம் தான் ஏங்குவதோ?
காலன் உன்னை எம்மிடமிருந்து பிரித்தாலும்
என்றும் எம் நினைவில் நீ இருப்பாய்
எப்போதும் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
Lakshna you an angel, you will be missed by olu. Sleep on angel.