15ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கு.வி. மகாலிங்கம்
சைவப்புலவர், சைவசித்தாந்த பண்டிதர், வித்துவான்
வயது 78
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சாவகச்சேரி மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், மீசாலை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கு.வி. மகாலிங்கம் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
பப்பா என்றழைத்தோம், பண்பான வழிதந்தீர்
தப்பும் தவறாமல் அறநெறியைக் காட்டிநின்றீர்
சைவப் புலமை பெற்றாய், சான்றோர்கள் புலவனென்றார்
கு.வி. குரல்கேட்டுக் குவலயத்தார் வளம்பெற்றார்
பப்பா என்றழைத்துப் பதினைந்து ஆண்டாச்சு
சொக்கா என்றழைத்து சிவனடியே சேர்ந்தாச்சு
காலம்தான் கடந்தாலும் நம்நெஞ்சமெல்லாம் நீதானே
நின்பூவுடல்தான் கரைந்தாலும் புகழுடம்பு மறையாதே
உங்கள் நினைவில் மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர்
தகவல்:
குடும்பத்தினர்