Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 APR 1948
இறப்பு 27 JUN 2024
திரு குழந்தைவேலு குறிஞ்சிவேந்தன்
வயது 76
திரு குழந்தைவேலு குறிஞ்சிவேந்தன் 1948 - 2024 சரவணை, Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட குழந்தைவேலு குறிஞ்சிவேந்தன் அவர்கள் 27-06-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குழந்தைவேலு, பராசக்தி தம்பதிகளின் அருமை மகனும் , காலஞ்சென்ற அருளானந்தசிவம், சரசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

கிருஷ்ணபிரியா, ஜீவானந்தா, ஜனார்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

துஷ்யந்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,

வெண்ணிலா, நவிரா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,

கணேசலிங்கம், காலஞ்சென்ற வள்ளிநாயகி, பகீரதி, மகாதேவன், சுந்தரமூர்த்தி, புஸ்பராணி, செவ்வேள் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான அம்பிகா, திருநாவுக்கரசு மற்றும் கந்தப்பிள்ளை, திருமணச்செல்வி, வசந்தா, கணேசமூர்த்தி, வளர்மதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ஆனந்தி - முரளிமனோகரன், பவந்தி - தர்மவேலாயுதம் , அனுரதி - தணிகாசலம், ஆரணன் - குணஜி, சுபகரி - நடேசன், தயாபரி - வின்சன்ட், நிரந்தரி - சிவபாதம், காலஞ்சென்ற மாதவன் மற்றும் குருபரன் - கோமதி, சனாதனி - ஐங்கரன் ஆகியோரின் அன்பு அத்தானும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 30-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் மு.ப 09:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, பின்னர் 01-07-2024 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று, அதனைத்தொடர்ந்து மு.ப 11:30 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சாந்தி - மனைவி
பிரியா - மகள்
ஜனா - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices