யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குருசுமுத்து அடைக்கலம் அவர்கள் 06-11-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், குருசுமுத்து அன்னம்மா தம்பதிகளின் மூத்த மகனும்,
ஆரோக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
இருதயநாதன்(தவறாஸ்- லண்டன்), அமிர்தநாதன்(அன்ரன்- லண்டன்), அமலநாயகி(அமலா), அருள்நாயகி(பெமிலா- ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வவா(லண்டன்), றோகினி(லண்டன்), ஜேசிங்கா, அருள்தாஸ்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வெனோ, காலஞ்சென்ற நேசமணி, திரேசம்மா, நாதன்(லண்டன்), அருட்சகோதரி றொசிற்றா(தி.கு), பவளம், ஜெயந்தி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மிரோன், மிரேனா, வெரேனா, றொஷானி, றெனி, லிண்டா, மேரி அனோஜா, டினேசினி(அபிவிருத்தி உத்தியோகத்தர்- நல்லூர்), கிருசாளினி, நிசாந்தினி, சகாணு, சாள்ஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
நோறா, ஜோடன், ஐடன், ஹெய்லி, டெரின் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கத் திருப்பலி 08-11-2021 திங்கட்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் நவாலி புனித பேதுரு ஆலயத்தில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
My deepest sympathy for your loss"