

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குருபரநாதன் பத்மராணி அவர்கள் 22-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரெத்தினம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற குருபரநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற மகேந்திரன்(அகிலன்), யசோதரன்(யசோ), சிறிதரன்(சிறி), உஷா(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான அருளானந்தம், வில்வரெத்தினம், பத்மாவதி(கனடா), பத்மநாதன், ஏரம்பமூர்த்தி, பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சகிர்தா, கோபிகா, ராகுலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன், லீலாம்பிகை, கமலாம்பிகை, சிவநேசன், குமரையா, தவமணிதேவி, பத்மநாதன், மங்களேஸ்வரி மற்றும் தனலட்சுமி(கனடா), ஜெயக்குமாரி(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
சிவகாமிப்பிள்ளை, கிருஸ்ணபிள்ளை, கந்தையா, கலைவாணி, நந்தகுமாரி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலியும்,
சஜித், தருண், கவியரசன், அக்ஷனா, கம்சிகா, நிருஜன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-07-2025 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கேரதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you and your family. Rip maami