யாழ். ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Biel/Bienne,கொழும்பு, யாழ்ப்பாணம், யாழ். வேலணை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குருலிங்கம் சிவசுப்ரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 04-04-2026
ஓராண்டு காலம் சென்றிருந்தால் என்ன
ஐயா உங்களின் பார்வையும் தோற்றமும்
செயல்களும் கண்முன்னே கற்றாடுதய்யா!
எம்மவர் விழிகளில் நீர் ஓடிக் கொண்டே
நினைவலைகளால் எம் உள்ளம் வாடுதே ஐயா!
பாசத்தின் கருவியாய் பண்பின் சிகரமாய்
அன்பின் திருவுருவாய் எதை நீர் செய்தாலும்
கண் போல எமை எல்லாம் காத்து யாவருக்கும்
ஆசை மொழி கூறி அரவணைத்து
பேணிக் காத்த எம் தெய்வமே!
அலை அலையாய் வரும்
கடல் கூட வெயிலில் வற்றி விடும்.
என் கண்ணில் கண்ணீர் வற்றவில்லையே...
நித்தமும் உங்கள் நினைவு
என்னை பித்தம் கலக்க வைக்கிறது...
ஆயிரம் ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள் எங்கள்
மனதில் என்றென்றும் நிறைந்திருக்கும்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் வாடும்
உதயகுமாரி(மனைவி), வசிவன்(மகன்)