35ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் குணரட்னம் இரிசியலிங்கம்
வானொலி இயக்குனர்- பொலிஸ்
வயது 41

அமரர் குணரட்னம் இரிசியலிங்கம்
1948 -
1990
வட்டுக்கோட்டை, Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குணரட்னம் இரிசியலிங்கம் அவர்களின் 35ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பா நீங்கள் எப்போதும்
எங்களுடன் மிக மிக
அன்பான அப்பாவாக இருந்தீர்கள்
முப்பது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு
இருந்த இழப்பு வார்த்தைகளால்
சொல்ல முடியாது
மலர்களும் ஈடு கொடுக்க முடியாது
மறைந்தும் மறையா எங்கள்
ஆதவப்பெரும் ஜோதியே!
உங்கள் ஒளிக்கீற்றில்
நாங்கள் வாழ்வது போல்...
நாம் இருக்கும் வரை உங்கள்
நினைவலைகள் எங்களுக்குள் அழியாமல்
இருக்க வேண்டும் என்பதால்
வாழ்நாள் முழுவதும் நினைக்கும்
போதெல்லாம் உங்கள் நினைவுத் துளிகள்
விழிகளின் ஓரம் கண்ணீராய்
கரைகின்றதப்பா..!!
எங்கள் நெஞ்சமதில் நிறைந்திருக்கும்
அன்புத் தெய்வத்தின் பொற்பாதத்தில்
மலர்தூவி மலர் அஞ்சலி செய்கின்றோம்.
என்றும் உங்கள் நீங்காத நினைவுடன்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்