

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்ட குணரத்தினம் சபாநாதன் அவர்கள் 22-02-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குணரத்தினம், பாக்கியவதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற நடராஜா, பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
சிவகுமரன், சிவகுணா, சிவதனுஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற இரத்தினாவதி மற்றும் நல்லநாதன், நிர்மலாதேவி, முருகநாதன், தர்மநாதன், ஜெயநாதன், ஜெகநாதன், நவநீதநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கலைச்செல்வி, கனக நடராஜன், கனகநாதன், கனகபதி, கனகபாரதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
புவனாதேவி அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 07.30 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கிளிநொச்சி கந்தன்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.