யாழ். திருநெல்வேலி தெற்கு, மாரிஅம்மன் லேனைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட குணநாயகம் குமரநாயகம் அவர்கள் 14-02-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், குணநாயகம் அமராவதி தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-02-2026 திங்கட்கிழமை அன்று அவரது தாயின் இல்லத்தில் நடைபெற்றது.
இவர் வெளிநாட்டிலும், இலங்கையிலும் கப்பல்துறை முகங்களில் கப்டனாக கடைமை ஆற்றி ஓய்வுபெற்றவர்.
கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எம் முன்னே உங்கள் முகம்
என்னாளும் உயிர் வாழும்
மண் விட்டு மறைந்த நீங்கள்
விண்ணோக்கிச் சென்றாலும்
கண் விட்டு மறையாமல்
பல காலம் இருப்பீர்கள்
வாழ்ந்த நாட்களை
வசந்தமாக்கி விட்டுச் சென்ற உத்தமரே
உதிர்ந்தது நீங்கள் மட்டுமல்ல
உடைந்தது எங்கள் இதயமும்தான்
நிழலில் இசைந்தாடி நினைவில் இழைந்தோடி
நெஞ்சில் உயிர் வாழும் உறவே
மண் கடல் வான் உளவும் மறவோமே
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.