10ம் ஆண்டு நினைவஞ்சலி
Dr. குணபாலசிங்கம் ஜீவராசன்
வயது 51
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குணபாலசிங்கம் ஜீவராசன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பத்தாகியும்
எங்களால் ஆறமுடியவில்லை
உங்கள் பிரிவால்
வடியும் கண்ணீரும் காயவில்லை
பாசமழை பொழிந்து
நேசமாய் எமை வளர்த்து
துணிவுடனே நாம் வாழ
வழியதனைக் காட்டிவிட்டு
எமைவிட்டு சென்றதெங்கே?
காலங்கள் கடந்து போகும் ஆனால்
உன் நினைவுகள் மட்டும்
காலம்தனை வென்று எம்மிடத்தில் நிற்கும்
எம்
கண்ணிறைந்த கண்ணீரோடு ...!
இன்றுடன் 10ஆண்டுகள்
ஓடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள்
என்றென்றும்
எம்மை விட்டகலாது.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்