5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் குமுதினி சபாநாயகம்
B.Sc-(முன்னாள் உயிரியல் ஆசிரியை- யா/வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை)
வயது 54
Tribute
33
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வேலணை வடக்கைப் பிறப்பிடமாகவும், நாவலர் வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த குமுதினி சபாநாயகம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
உன்னை இழந்து ஆண்டு ஐந்து ஆனாலும்
உந்தன் ஆசைமுகம், நேசப்புன்னகை
மறையவில்லை.....!
நேற்று போல் இருக்கிறது
உன் நெஞ்சகலா அந்நினைவு!
நெஞ்சம் பதைக்கிறது அந்நாளை
நினைக்கையிலே
ஏன் என்னை மறந்தாய்!
நாங்கள் உன்னை பிரியவில்லை - ஆனால்
நீ எங்கள் அருகில் இல்லை
உன்னை யாசிக்கிறோம் - அதைவிட
உன்னை நேசிக்கிறோம்...
எம் மூச்சு காற்றோடு மட்டும் தான் உன் உரசல்கள்
நீ காற்றோடு தானே கலந்துவிட்டாய்..
"எங்கள் உயிரில் கலந்ததுபோல்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Sabanayagam and family please accept our heartfelt condolences. May Kumutha’s soul Rest In Peace - Kumareswarans