Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 28 JUN 1976
உதிர்வு 12 JUN 2022
அமரர் குமரதாஸ் நடராஜா
B.SC, MSC
வயது 45
அமரர் குமரதாஸ் நடராஜா 1976 - 2022 அன்னமலை, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

அம்பாறை அன்னமலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா இங்கிலாந்து Swindon ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குமரதாஸ் நடராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரனே!
என்னுடன் பிறந்தவனே
என்னருமைச் சகோதரனே !

உன்னைத் தேடி என் கண்கள் களைத்ததடா...
அமைதியின் அடைக்கலமாய்...
அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த எம் சகோதரனே...!

உடல்கள் உயிரை பிரிந்தாலும்
உணர்வுடன் ஒன்றாகிப்போன எம் உடன்பிறப்பே

ஆண்டுகள் இரண்டு ஆனதடா
ஆறவில்லை எங்கள் மனம்
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
உன் போல் ஆகிடுமா

வாழ்ந்த கதை முடியமுன்
இறந்திடவா நீ பிறந்தாய்
உன் வாழ்வு தொடங்கும் முன்
நீ எங்கே சென்றாய் தனியே

இரண்டு ஆண்டு என்றாலும்
பல ஆண்டு சென்றாலும்
உன் பிரிவை ஏற்கவில்லை எங்கள் மனம்
என்றும் உன் நினைவுகளுடன் நாம்
பிறந்து விட்டோம் இம்மண்ணில்
இறுதிவரை வாழ்வோம் நீ
விட்டுச் சென்ற நீங்காத நினைவுகளோடு... !

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

Notices

அகாலமரணம் Thu, 23 Jun, 2022
நன்றி நவிலல் Mon, 11 Jul, 2022