
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசிங்கம் நாகேஸ்வரி அவர்கள் 07-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சங்கரத்தை வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கந்தையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கந்தையா குமாரசிங்கம்(ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்- ACI ltd) அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஆதவன்(IT விரிவுரையாளர்- DMI), தாரணி(Regional Enviromentel Laboratory- Canada), ஆரணி(Angel International School Teacher) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுகுணன்(கனடா), லதன்(பொது சுகாதார பரிசோதகர்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஓவியா, விவேகன், அற்புதா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, இராசதுரை, செல்வரட்ணம், குமாரவேலு, சுப்பிரமணியம், அன்னம்மா மற்றும் அன்னலட்சுமி, சரஸ்வதி, மகேஸ்வரி, குணமணி, தவமணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, மகேஸ்வரன்,சிவசுப்பிரமணியம், வைத்திலிங்கம், பரராஜசிங்கம், கந்தசாமி, கமலாதேவி, அன்னபூரணம், இராஜேஸ்வரி, செல்லம்மா மற்றும் சந்தானலட்சுமி, தர்மலிங்கம், தேவி, வசந்தா, ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. கெங்காதரன், திரு. திருமதி. இராசதுரை ஆகியாேரின் சம்மந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-03-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.