யாழ். மின்சார நிலைய வீதி 3ம் லேனைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி குமாரசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 02-07-2024
தாய்க்கு வரைவிலக்கணமே நீதானம்மா!
எங்கள் மீது அன்பு மழை பொழிந்து
பாசமாய் வளர்த்தெடுத்தாயே!
நீங்கள் மண்ணுலகை பிரிந்து
பன்னிரு மாதங்கள் சென்றதம்மா!
என்ன நடந்தது ஏது நடந்தது
என்று கணக்கிட்ட நாட்கள்
அதற்குள் ஆண்டு ஒன்று ஆகி விட்டதே!
நீங்கள் மறைந்து ஓராண்டு ஓடி மறைந்தாலும்
உங்கள் ஒளிமுகத்தை முன் நிறுத்தி என்றும்
உங்கள் மீளா நினைவுகளுடன் வாழ்கின்றோம் அம்மா!
அன்று எம்முடன் வாழ்ந்து மறைந்தீர்கள்
இன்று எம்முடன் மறைந்து வாழ்கின்றீர்கள்!
பிறப்பு, இறப்பு இணைந்தது எனினும்
இழப்பினை நெஞ்சம் ஏற்பதில்லையம்மா!
இந்த உடலும் உயிரும் உங்களது என்றாலும்
கண்ணீரும் கவலைகளும் எங்களது ஆகிற்றே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
என்றும் உங்கள் நினைவுடன் வாழும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.