யாழ். நல்லூர் மூத்த விநாயகர் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி ஸ்ரீதரன் அவர்கள் 18-03-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவபாலன், கனகமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கந்தசாமி சிவசோதி தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,
இரஞ்சினிதேவி, காலஞ்சென்ற இரவீந்திரன், பவானி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லோகநாதன், தெய்வேந்திரகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லவீந்திரன், பார்த்தீபன், துஷாயினி, துளசி, டினேஸ்கரன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
பிரிந்தா, ரிஷிபவன், மரூபன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
சுரேஸ்கண்ணா அவர்களின் சிறிய தந்தையும்,
அபிஷ்லா, அஸ்விகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-03-2021 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:30 மணியளவில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.