
யாழ். பூநகரி மட்டுவில் நாட்டைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் குட்செட் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி சதாசிவம் அவர்கள் 13-12-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
நாகரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
இராஜகுமார்(குமார், ஜேர்மனி), காலஞ்சென்ற ஜீவகுமார்(ஜீவா, நோர்வே), கோபிந்தகுமார்(கோபி, ஜேர்மனி), திலீப்குமார்(திலீப், ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரத்தி, இதயா, தாட்சாயினி, வசந்தனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பேரப்பிள்ளைகளின் பாசமிகு பேரனும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான மங்கையற்கரசி, இரத்தினசிங்கம் மற்றும் சந்தானம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை, ரவீந்திரன் மற்றும் பூபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-12-2024 திங்கட்கிழமை அன்று முற்பகல் நடைபெற்று பின்னர் ந.ப 10:00 மணியளவில் கோண்டாவில் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தொடர்புகளுக்கு
- Contact Request Details