யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், மண்கும்பான், வேலணை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி பன்னீர்செல்வம் அவர்கள் 11-03-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி பாக்கியலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சாந்தலிங்கம், அமிர்தவல்லி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜா அவர்களின் பாசமிகு கணவரும்,
சதீஸ்குமார்(நெதர்லாந்து), காலஞ்சென்ற சகுந்தலா, குமுதினி, விஜயகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜலஜா அவர்களின் அன்பு மாமனாரும்,
இளங்கோ, இளந்திரையன், இளங்கோதை, உதயராணி, காலஞ்சென்ற தவராணி, செல்வம் ஆகியோரின் அன்பு அத்தானும்,
சிவபாதம், ஶ்ரீதர், தங்கேஸ்வரி, உதயா ஆகியோரின் சகலனும்,
பிரவீணா, பிரதீபா, பிரதீஷ், சஷ்வின் மற்றும் காலஞ்சென்ற சபீனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணி தொடக்கம் மு.ப 10:00 மணிவரை அவரது வீட்டில் நடைபெற்று, அதனைதொடர்ந்து வேலணை சாட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.