
யாழ். நல்லூர் கச்சேரி வீதியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் நவாலி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி நவரட்ணராசா அவர்கள் 24-02-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
பத்மாவதி(இலங்கை) அவர்களின் அன்புக் கணவரும்,
வனிதா(இலங்கை), சுயதா(லண்டன்), இரத்தினராசா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குகேந்திரன்(இலங்கை), நிர்மலதாஸ்(லண்டன்), கோமதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிங்கரத்தினம், ஜெயராசா மற்றும் துரைசிங்கம்(பிரான்ஸ்), இராஜேஸ்வரி(பிரான்ஸ்), புஸ்பராசா(டென்மார்க்), காலஞ்சென்றவர்களான செல்வராசா, இரட்ணசிங்கம் மற்றும் யோகராணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இரட்ணலிங்கம்(பிரான்ஸ்), இந்திரகுமார்(பிரான்ஸ்), கந்தசாமி(இலங்கை), வசந்தா(இலங்கை), சாரதா(இலங்கை), செல்வராணி(பிரான்ஸ்), தபேஸ்வரி(டென்மார்க்), லலிதாதேவி(பிரான்ஸ்), பரமேஸ்வரி, திலகவதி, மங்கலேஸ்வரி, புனிதவதி, கலாவதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யஸ்வினி, சஜிவர்ணா, வினிசாந், கபினயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 25-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அரியம்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
RIP