யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல. 413 வட்டக்கச்சி இராமநாதபுரம் கிளிநொச்சியை வதிவிடமாகவும், இல. 42, வைரவ கோயில், வைரவபுளியங்குளம் வவுனியாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி மகேந்திரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
குடும்பத் தலைவராயும்
கடமையில் ஆசானாகவும்
இவ்வுலகில் மிளிர்ந்தீர்கள்
உங்கள் புன்சிரிப்பு நிதம்
எமை வாட்டுகின்றது அப்பா
கண்ணை மூடி நான் தூங்க
கனவில் உந்தன் முகம் தெரிகிறதே
பாசம் காட்டும் உன் முகத்தை
நான் யாரிடமும் இன்னும் அறியலையே.....
நீங்கள் எம்மைவிட்டு நீண்டதூரம் சென்றாலும்
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புகள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும் அப்பா...
எம் இதயம் கலங்குதையா
ஏங்கி மனம் வாடுதையா...
ஒரு கணமும் நாம் உமை மறந்ததில்லை
ஓராயிரம் நாட்கள் வந்தாலும்..
உங்கள் நினைவு எம்மை விட்டு நீங்காதையா...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
என்றும் உங்கள் நினைவால் வாடும்
குடும்பத்தினர்..!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 15-08-2026 சனிக்கிழமை அன்று காலை 07:00 மணியளவில் யாழ் கீரிமலை புனிததீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிரியைகள் 17-08-2026 திங்கட்கிழமை காலை 10:00 மணியளவில் அவரது இல்லத்திலும் நடைபெறவிருப்பதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகைதந்து அன்னாரின் ஆத்ம சாந்திப்பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
வைரவர் கோயில் வீதி,
இல.42, சுபாஜினி வைற் கவுஸ்,
வைரவப்புளியங்குளம்,
வவுனியா.