
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளியவளையை வதிவிடமாகவும் கொண்ட குலசிங்கம் கமலாதேவி அவர்கள் 01-09-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், உடுவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற சின்னத்தம்பி, அழகம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், வவுனியாவைச் சேர்ந்த காலஞ்சென்ற பரமு, ஜெயலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
குலசிங்கம் அவர்களின் ஆருயிர்த் துணைவியும்,
இன்பவேணி(வேணி- இலங்கை) அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற இராசையா(இலங்கை), யோகேஸ்வரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சுந்தரராசா(இலங்கை), சிவலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற பிருந்தாதேவி(இலங்கை), சோதிமணி(இலங்கை), நடேசு(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரகாஸ்(ஜேர்மனி), நிசாந்தன்(ஜேர்மனி), பிரசாந்தி(ஜேர்மனி), கிருஷ்ணரூபன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சித்தியும்,
நந்தகோபால்(நந்தன்- ஜேர்மனி), ஜெயமதி(ஜேர்மனி), சியாமளா(ஜேர்மனி), கருணாகரன்(ஜேர்மனி), சிந்தியா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கவினயா, கபினுயன், அஷ்வின், அக்சயன், வர்சிக்கா, நிலவரசி, தேனுயன், யதுரா, சன்சிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details