யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மல்லாவியை வசிப்பிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட குலசேகரம்பிள்ளை வள்ளியம்மை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.
அம்மா! அன்பு தீபமே...நீ அணைந்துவிட்டாய்
நெஞ்சுருகி அழவைத்துவிட்டு... நெடுதூரம் சென்றுவிட்டாய்
புன்னகை பூவே ! பிணி உன்னை பீடித்தாலும்
இறுதிவரை இறுமாப்பாய் வாழ்ந்து- மறைந்துவிட்டாய்...
ஈடு செய்ய முடியாத இழப்பென்றால்
அது உன்னை இழந்த சோகமென்பேன்..
இட்டு நிரப்ப முடியாத இடமென்றால்
அது என்னைப் பெற்றெடுத்த தாயின் மடியென்பேன்,
உடைந்து விழும் கண்ணீர் துளிகளில்
உன் உருவம் தெரியுதம்மா- நாம்
இணைந்து வரமுடியாத இறுதி
யாத்திரைக்கு
நீ மட்டும் தனியாகச் சென்று விட்டாயே?
மகள், மருமகன்
அன்னாரின் மரணச் செய்தி கேட்டு நாம் துயரத்தில் இருந்த வேளையில் நேரில் வந்து தொலைபேசி ஊடாகவும் தொலைநகல் மின்னஞ்சல் சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும் மலர்வளையங்கள் மலர் மாலைகள் சாத்தியவர்களுக்கும் உற்றார் உறவினர் நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் கனத்த இதயத்திலிருந்து எம் நன்றிகளை கனம் இறக்கி வைக்கின்றோம். நன்றிகள்
Rest in Peace