

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, சுவிஸ் Lugano ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் குலசேகரம்பிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் திருவுருவே! அருள் நிறைவின் இருப்பிடமே!
பண்பின் சிகரமே! பாசத்தின் பிறப்பிடமே!
ஏற்றமிகு எங்கள் வாழ்வின் உயர்வுக்கு ஏணியாய் திகழ்ந்தவரே!
உன்னையே உருக்கி ஒளி தந்து மெழுகுவர்த்தியே!
வேரென இருந்து எம்மை கார்த்தீர்கள், விழுதுகளாய் நாமிருந்தோம்!!
கள்ளமற்ற உன் முகத்தை கண்டாலே போதுமய்யா!
உள்ளமெல்லாம் உவகை கொள்ளும் உலகமே மறந்துவிடும்
பிரிந்து நீ சென்றெமக்கு பெருந்துயரைத் தந்தாலும்- நாம்
வருந்துகின்றோம் உன் நினைவால் வந்துவிடு வையகத்தில்!
ஆருயிர்க் கணவராய் அருமைமிகு அப்பாவாய்
பண்பான மாமாவாய் பாசமிகு பேரனுமாய்
அன்பான உற்றார், உறவுகளும் ஊர்மக்கள் எல்லோரும்- நாம்
கண் துஞ்சாது உனை காண்பதற்கு காத்து உள்ளோம்!
உன் நெஞ்சார வந்து எம்மை நீடூழி வாழ்த்திவிடு!
காலத்தால் அழியாது எம் கனவினிலும் உன் பிரிவு
ஞாலத்தில் வந்துவிடு தினம் நம் துயரம் தீர்த்துவிடு!
ஆண்டு இரண்டு ஆனாலும் எம் ஆழ்மனதில் நீ இருப்பாய்
நீண்டு செல்லும் காலமெல்லாம் எம் நெஞ்சமதில் நிலைத்திருப்பாய்!
எங்கள் அன்புத் தெய்வத்தின் ஆத்மா
சாந்தியடைய எல்லாம் வல்ல ஆண்டவனை
வேண்டி பிரார்த்தித்து அஞ்சலி செய்கின்றோம்!!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
rip