யாழ். மருதங்கேணியைப் பிறப்பிடமாகவும், யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், இந்தியா சென்னை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட உமையாத்தை குழந்தைவேலு அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
31 நாட்கள் ஆனதம்மா
உங்கள் அன்பு முகம் எம்
இதயங்களை விட்டு இன்னும்
கரையவில்லையம்மா!
கண்கள் மட்டும் உன்னுருவை
காண்பதற்கு துடிக்கிறது!
காதுகளும் உன் குரலை
கேட்டிடவே விரிகிறது!
சிந்தையிலே உன் நினைவு
சிறகடித்து பறக்கிறது!
எண்ணங்களில் உன் நினைவு
இறுக்கமாக அணைக்கிறது!
விழியோரம் கசியும் கண்ணீர்
உறவுகளை மட்டுமல்ல
உள்ளத்தையும் ஒரு நொடி
உறைய வைக்கும் அம்மா
உலகையே எங்களுக்கு தந்தாலும்
உங்களை போல் இணையாகுமா-
அம்மா உங்கள் கருவிலே சுமந்து
எங்களுக்கு உயிர்கொடுத்தாய்
இன்று நீங்கள் இன்றி
எங்கள் உயிர் விலகி நிற்கின்றது அம்மா ....
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எமது ஆழ்ந்த அனுதாபங்கள் அரவிந்தன், சாந்தி மொன்றியல் கனடா