
யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெடுங்கேணி நயினாமடுவை வதிவிடமாகவும், கிளிநொச்சி திருவையாற்றை வசிப்பிடமாகவும் கொண்ட குழந்தைவேலு திலகவதி அவர்கள் 16-11-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குழந்தைவேலு அவர்களின் அன்பு மனைவியும்,
அமிர்தசுரபி(வவுனியா), லோகநாதன்(கனடா), யோகேஸ்வரி(ஓமந்தை), சிவானந்தகெளரி(ஜேர்மனி), யோகரட்ணம்(கணுக்கேணி மேற்கு), செந்தீசன்(பெல்ஜியம்), சத்தியபாமா(கிளிநொச்சி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பேராம்பிகை(கனடா), ஏழாலையைச் சேர்ந்தவர்களான சுப்பிரமணியம், கமலாம்பிகை, குணரட்ணம், செல்வரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவசாந்தி, சசிகரன், காலஞ்சென்ற சிறீஸ்கந்தராசா, ஜெயகெளரி, செந்தாமரைச்செல்வி, சேரன் ஆகியோரின் மாமியும்,
கெளதமன், ஜெனனி, அங்கனி, பகவன், அபிநயா, கலைநிலா, ஆரியன், நேயா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜான்வி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-11-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் திருவையாறு, கிளிநொச்சி எனும் முகவரியில் உள்ள இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருவையாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.