யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட குழந்தைவேலு சற்குணானந்தன் அவா்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், வீட்டுக் கிரியைகளும், நன்றி நவிலலும்.
எங்கள் அன்புத் தெய்வமும் எங்கள் குடும்பத் தலைவருமாய் இருந்து எங்களை நல்வழிப்படுத்திய திரு குழந்தைவேலு சற்குணானந்தன் அவர்கள் உயிருடன் இருந்தவேளை உள்ளத்தால் நேசித்தவர்களுக்கும், அவர் உயிர்பிரிந்த வேளை தங்கள் அன்பையும், இரங்கலையும் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், எங்களது அன்புத் தெய்வம் நோயுற்று இருந்தபோது, தேவையான போதெல்லாம் உதவி ஒத்தாசைகள் புரிந்து அவரை உளமார நேசித்தவர்களுக்கும், அவரது இறுதி கிரியைகளை செவ்வனே செய்து அவரது இறுதிப் பயணத்தை சிறப்புற நடைபெற ஒவ்வொரு வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரின் வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் எதிர்வரும் 31-05-2021 திங்கட்கிழமை அன்று காலை 06:30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்களும் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப்பிரார்த்தனையிலும் அதனை தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும்(12:30 pm) கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Every time I have taken my kids to Alton Towers, it brings me back strong memories of uncle driving us there in a coach when I was a child. He and his family were a big part of creating some deep...