யாழ். புங்குடுதீவு 3 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் , கொழும்பு, திருகோணமலை, இந்தியா, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த குழந்தைவேலு மகாலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களைக் கண்போல காத்து
பண்போடு வளர்த்து
நட்கல்வியும் நல் வாழ்வும்
தேடித் தந்த ஒளிவிளக்கே
எம் அன்பிற்கு உறைவிடமான
எமது அருமை அப்பாவே
உம் பிரிவை நாம் சுமந்து
ஒரு வருடம் ஆனபோதிலும்
ஆறாத உமது நினைவுகளால்
மாறாத எமது கவலை என்றும்
வாராதா உமது இனிய முகம்
காணாதா எமது கண்கள்
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புக்கள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும்
அப்பா என்ற சொல்லுக்கு நீங்களே இலக்கணம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
மருமகன்கள், மகள்கள்- S.ஞானமோகன், G.விஜிதா, M.கஜேந்திரன், G.தயாநிதி
மகன்கள், மருமகள்கள்- M.கோபிகுமார், G.ரம்யா, M.நிசாந்தகுமார், N.கிருசாந்தி, M.டீபகரன், D.அருள்மொழி
பேரப்பிள்ளைகள்- G.ரிஷி நேத்தன், G.ஹரிணி, D.ரிதிஹாக்ஷிணி, G.கவீன், D.யவின் கௌதம், G.பிரநீதா, N.கர்ஜித்
May his soul Rest In Peace