யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு ஸ்ரீ குணாந்த மாவத்தை வசிப்பிடமாகவும் கொண்ட குழந்தை மாரிமுத்து அவர்கள் 21-08-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குழந்தை, கதிரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மருதபிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
தயாபரன்(லண்டன்), தயாளினி(இத்தாலி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சோமன்(இலங்கை), தவமணி(ஜேர்மனி), சண்முகநாதன்(ஜேர்மனி), காந்தி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
முரளிதரன்(லண்டன்), விஜயலட்சுமி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற இராசசூரி(இலங்கை), இளையபிள்ளை(இலங்கை), கந்தசாமி(கனடா), காலஞ்சென்ற ஆறுமுகம்(இலங்கை), சிவகொழுந்து(இலங்கை), காலஞ்சென்ற விக்ரோறியாராணி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற திரவியம்(இலங்கை),தவமணிதேவி(லண்டன்), குணம்(இலங்கை), காலஞ்சென்ற பூமலர்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,
கீர்த்தனா, அர்ச்சனா(லண்டன்), அபினா(இத்தாலி) ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.