யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குலநாதன் ஜெகநாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னார், காலஞ்சென்ற ஜெகநாதன் புனிதமலர் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற நிர்மலநாதன்(மேஜர்), நளினி, தாரா, ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சுஜி, பிரவின், அபிரா, திபிகா, சந்தியா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
தரன், லோகன் ஆகியோின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
2ம் ஆண்டு துரோகத்தின் நினைவு...
ஆண்டிரண்டு ஆயினும் ஆறாது எம் துயர்கள்
வலிகளை சுமந்து தனிமையிலே அழுகின்றோம்
நினைவுகள் வருகையில் நிலை குலைந்து நிற்கின்றோம்
பார்த்துப் பார்த்து பலதும் செய்தீர்களே
பாதியிலே உங்கள் வாழ்வு முடிய கண் வைத்தது யாரோ?
எத்தனை ஆசைகள்! எத்தனை கனவுகள்!
எல்லாம் ஒரு நொடியிற்குள் நொருங்கிப் போனதே
இது தான் வாழ்க்கையென எழுதிவைத்த இறைவனின்
தத்துவங்கள் புரிந்தும் தவிக்கின்றதே எங்கள் உள்ளம்!
ஈராண்டு ஆண்டுகள் ஆகியும் ஆறவில்லையா மனமென்று
கேள்விகள் கேட்போர் ஆயிரம்!
மாண்டவர் வருவதில்லை மனதை ஆற்றிவிடு என்று
அறிவுரைகள் கூறுவோர் ஆயிரம்!
ஈராண்டுகளென்ன ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்
அன்பினால் இணைந்த நெஞ்சம் அணுவளவும் மாறாது.
உங்கள் ஆத்மா சாந்திக்காக ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்.
நீங்காத உங்கள் நினைவுகளுடன் வாழும்
நண்பர்கள் மற்றும் உற்றார், உறவினர்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய 28-09-2019 சனிக்கிழமை அன்று Montreal யில் உள்ள முருகன் ஆலயத்தில் பூஜை நடைபெறும்.