திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வவுனியா வைரவபுளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட குலலிங்கம் அகிலேந்திரன் அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
ஒன்ரரை மாதம் மறைந்து விட்டது !
அகலுமா பிரிவின் சோகம்
மறையுமா நினைவின் பாசம்
எங்களை நிர்க்கதியாய் பரிதவிக்க விட்டு
எங்கு சென்றீர்கள் காலங்கள் ஆயிரம்
போனாலும் மறக்க முடியுமா
உங்கள் நினைவுகளை!
ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவாரோ என்பார்கள்
அது எமது அறிவுக்குத் தெரிகிறது
ஆனால் எங்கள் மனதிற்கு தெரியவில்லையே!
பாசத்தின் முழு உருவம்
பாதியிலே எம்மை விட்டு ஏன் போனீர்கள்?
எங்கள் அடுத்த பிறவியிலும்
எங்கள் குடும்ப ஒளி விளக்காய் நீங்களே வரவேண்டும்
உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும்
இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும், சுகாதாரப் பிரிவு சார்ந்த அனைத்து வைத்தியர்கள், உத்தியோகஸ்தர்கள் அனைவருக்கும்
எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.