யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நயீனாதீவு, பிரான்ஸ் Strasbourg ஆகிய இடங்களை குகதாசன் விஜயானந் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
"ஆயிரம் தான் ஆனாலும்...
ஆறுமா துயர்....?"
ஆனாலும் அவசரம் ஆதாய்யா
அகல்விளக்கே நீ அணைந்து போனதேய்யா...நீ
அறியாதது துயர்தந்துஅகன்றே போனாய்.....
அழுதழுது நாங்கள் இங்குநொந்தே வாழ....
ஆண்டொண்று ஆனதென்று
யாரோசொல்ல ...
ஆயிரம் தான் ஆனாலும் ..
ஆறுமா துயர்....
அரைவிதிதான் எழுதிய...அ
ந்த ஆண்டவன் ஏன்?
அழியாத துயர் தந்தார்எங்கள் வாழ்வில்...
ஆகாயம் அனலாக...
அதிகாலை இருளாக...
மாறாத ரணம் தந்த உன் பிரிவு
காணாத கனவென்று கருதுமுன்னே ஆண்டொன்று ஆனதுவே அது எப்படி?
சிரித்த கனமெல்லாம்
சிந்தைக்குள் வந்துநின்று...
நெருப்புக்குளமாக...
நெஞ்சுக்குள்நின்றுகொ(ல்ல)ள்ள...
வருத்த கனமாக வந்துபோகும்
காலத்தை வெறுக்க முடியாது
நொந்து நொந்து வாழுகின்றோம்..
கற்பனைக்கு எட்டாத தூரமதில்....
கண்ணே..உன்னை விட்டுவிட்டு...
கவலையே சூழ இங்கே...
கண்ணீரோடு நிற்கின்றோம்..
கண்ணே..நீயும்..அமைதிகொள்ள..
கடவுளை..தினமும் வேண்டுகிறோம்..
உங்களின் ஆத்மசாந்திக்காக எல்லாம் வல்ல
வங்களாவடி ஸ்ரீ ஞானவைரவப் பொருமானை
வேண்டுகிறோம் .
ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!!