Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 12 MAR 1934
இறைவன் அடியில் 07 NOV 2025
திருமதி குகனேஸ்வரி சிவசரணம்
வயது 91
திருமதி குகனேஸ்வரி சிவசரணம் 1934 - 2025 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணை மேற்கு சிற்பனை 06ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாவும், வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், இல. 541/2 காலி வீதி. வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட குகனேஸ்வரி சிவசரணம் அவர்கள் 07-11-2025 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா சுந்தரம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா சிவசரணம் அவர்களின் அன்பு மனைவியும்,

கருணநாதன்(ஜேர்மனி), காலஞ்சென்ற குகநாதன்(Maharaja Foods and G.T.V Enterprises), ஞானசக்தி தயாபரன்(விகடன் பிறின்டர்ஸ்), திருநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கலைமணி கருணநாதன்(ஜேர்மனி), தவமலர் குகநாதன், தயாபரன்(ஓய்வுநிலை நீதிமன்ற உத்தியோகத்தர், Vihadan Printers), சிவகலை திருநாதன்(லண்டன்) ஆகியோரின் மாமியாரும்,

சிவகஜன்(ஜேர்மனி), சிந்துஜன்(ஜேர்மனி), யதீசன்(ஜேர்மனி), விஜயானந்த்(Maharaja Foods and G.T.V Enterprises), வித்தியநாத் (Maharaja Foods and G.T. Enterprises), கோகுல்நாத்(லண்டன்), சட்டத்தரணி நர்மதா கலாமோகன், Dr.விச்வநேத்திரன் (அவுஸ்திரேலியா), நிவேதா நந்தகுமாரன், சகிஷ்ணா(Solicitor, London), ஸ்ருதி (Biomedical Engineer, London), சாரகா (Depositary Manager, London), சுவன்யா சிந்துஜன்(ஜேர்மனி), லக்ஷனா யதீசன்(ஜேர்மனி), மித்ரா விஜயானந்த், கலாமோகன்(Arunthathee Pvt & Ltd), நிரோஜினி விச்வநேத்திரன்(சட்டவிரிவுரையாளர், அவுஸ்திரேலியா), நந்தகுமாரன்(Associate Engineering Manager, Virtusa Pvt & Ltd) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

வேல்(ஜேர்மனி), ஆதியா, அப்சரா, அட்சயன், நேத்ரா(அவுஸ்திரேலியா), உத்திரா ஆகியோரினது அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்ற விஸ்வநாதன், இராசலட்சுமி கனகரத்தினம், மோகனதாஸ்(சிவசக்தி ஸ்டோர்ஸ், செட்டித்தெரு), சரஸ்வதி சரவணபவானந்தன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற பகவத்சிங்கம் அவர்களின் அண்ணியும்,

காலஞ்சென்றவர்களான திலகவதி விஸ்வநாதன், கனகரத்தினம், ரதி மோகனதாஸ், சரவணபவானந்தன் ஆகியோரின் மைத்துனியும்,

மகேஸ்வரி பகவத்சிங்கம் அவர்களின் அன்புச் சகலியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 08-11-2025 சனிக்கிழமை முதல் 09-11-2025 ஞாயிற்றுக்கிழமை வரை இல. 541/2 காலி வீதி, வெள்ளவத்தை எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து பி.ப 01:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தயாபரன் - மருமகன்
விஜயானந்த் - பேரன்
வித்தியநாத் - பேரன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute