Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 25 OCT 1925
இறப்பு 20 JUL 2012
அமரர் குட்டிப்பிள்ளை கிட்ணர்
இளைப்பாறிய உதவி அரசாங்க அதிபர்
வயது 86
அமரர் குட்டிப்பிள்ளை கிட்ணர் 1925 - 2012 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், நல்லூர், பிரித்தானியா Perivale, அவுஸ்திரேலியா சிட்னி Pendle Hill ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குட்டிப்பிள்ளை கிட்ணர் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 29-07-2022

அணையாத தீயினில்
அலையான சுவாலையாய்
பத்து வருடங்களாகியும்
அனல் கக்கி எரியுதையா

எங்கள் அப்பாவே உங்கள் நினைவுகள்
அன்பின் அடையாளமே அரவணைப்பின் உதாரணமே
பண்பின் திருவுருவே பாசத்தின் இலக்கணமே
நேசத்தின் பிறப்பிடமே நிறைந்திட்ட குல விளக்கே

நீர் மறைந்துபோன நாளன்று
உறைந்துதான் போனோம்
இன்னும் உடைந்துதான் போகின்றோம்

எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உன் நினைவு எமை விட்டு அகலாது

நாங்கள் உன்னை மறந்தால்
தானே நினைப்பதற்கு நினைவே
என்றும் நீங்கள் தான்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்