யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஷ்ணசாமி யோகம்மா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
கருவினில் எங்களை சுமந்து
தெருவினில் நீங்கள் நடந்தால்
தேரினில் ஊர்வலமே அம்மா
பூச்சாண்டி வரும் போது
முந்தானை திரை போர்த்தி
மன பயம் தீர்த்திங்களே அம்மா
காணாத கடவுளுக்கு எங்கள்
கைகள் வணங்காது
உங்களுக்கு எங்கள் உயிரே ஆரத்தி
தினம் தினம் கலங்குதம்மா
கண்ணீரை உங்கள் கைகள் துடைத்து போகுமா
உயிருள்ள கடவுளை உங்கலுருவில் பார்க்கின்றோம்
நீங்கள் தான் நம்பிக்கை என்றுமே
நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று ஆண்டுகள் ஐந்து கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை அம்மாவின் அன்பு முகம்....
உலகமும் நிஜமில்லை, உறவுகளும் நியமில்லை
என்றுணர்ந்தோம் உங்களின் இழப்பால்..
இறைவனும் இரக்கமற்றவன்
என்றுணர்ந்தோம் உங்களின் இறப்பால்....
என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாங்க அம்மா
உங்கள் முகம் காண.....
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..