யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் porte d'Ivry ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஷ்ணசாமி கமலேந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
என் ஆயுட்காலம் முழுவதுமாய்
உன்னோடு செலவழிக்க எண்ணினேன்
இன்றோ நீர் இல்லாமல்
என் ஒவ்வொரு நொடியும் கண்ணீரில் கடக்கின்றது!
பாதி வழிதனிலே
விதி வந்து பிரித்ததுவோ?
பரிதவித்து நிற்கின்றேன்
விரைந்தோடி வருவீர்களோ!
ஆண்டொன்று ஆனாலும் மனம் ஆற மறுக்கிறது
சிரித்த முகத்தோடும் செயற்திறன் தன்னோடும்
செம்மையாய் வாழ்ந்த அப்பா!
ஆண்டு ஒன்று கடந்தாலும் ஆறிடுமோ
உங்கள் நினைவலைகள் அப்பா!
கண்ணின் மணி போல் எம்மைக் காத்த
அன்புத் தெய்வமே ஆறிடுமோ
எங்கள் துயரம் விதித்ததோர் விதியதால் விண்ணகம்
சென்றதைப் பொறுத்திட முடியுமோ தான்?
அப்பா, உங்கள் அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்!
பாசத்தின் பிறப்பிடமாய் பாரினிலே !
நேசத்துடன் எங்களை ஆளாக்கி
நேர்மையுடன் வாழ்ந்தீர்களே அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
உங்கள் நினைவால் வாடும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
சகோதரர்கள், மைத்துனிமார்.
REST IN PEACE