மரண அறிவித்தல்

அமரர் கிருஷ்ணர் செல்வநாயகம்
(தேவராஜா, தேவா)
சுழிபுரம் விக்டோரியா கல்லூரி பழைய மாணவர், உதைபந்தாட்ட வீரர்
வயது 73
Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணர் செல்வநாயகம் அவர்கள் 14-12-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கிருஷ்ணர் செல்லாச்சி தம்பதிகளின் மூத்த புதல்வரும், சின்னையா அருளப்பு நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றோஸ்மலர் அவர்களின் அன்புக் கணவரும்,
டொனால்ட், ஜெறோம்சன், றொசானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
டயானா, புஸ்பராஜா(நந்தன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செல்வமணி, சிவராஜா(செல்வம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிங்கராஜா, தேவராஜா, காலஞ்சென்ற யேசுராஜா, செல்வராஜா, தங்கராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜோரிஸ்(திவியன்), ஆரோஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
பிள்ளைகள், மருமக்கள்