
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Bergen op zoom ஐ வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணர் நடராசா அவர்கள் 24-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணர், சின்னப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், கந்தசாமி ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பராதா அவர்களின் அன்புக் கணவரும்,
சுபாஜினி(இலங்கை), தர்சினி(இத்தாலி), லோஜினி(சுவிஸ்), திலீபன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தர்மபாலன்(இலங்கை), மகேந்திரராஜா(இத்தாலி), சுதாகரன்(சுவிஸ்), ஜெறீன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கிருஷ்ணர் அன்னம்மா, கிருஷ்ணர் மகேஷ்வரி, கிருஷ்ணர் துரைராசா, கிருஷ்ணர் இராசரத்தினம், கிருஷ்ணர் அழகராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தனுஷ்காந், அனஸ்ரன், நிலக்ஷன், மதுஷாங்கி, அனிஸ், அகென்சா, த்ரிஷ்டன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.