5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கிருஷ்ணபிள்ளை வசந்தாதேவி
வயது 86
Tribute
19
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலேசியா Seremban ஐப் பிறப்பிடமாகவும், யாழ். நெல்லியடி, இந்தியா மண்டபம், பிரித்தானியா லண்டன் Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஷ்ணபிள்ளை வசந்தாதேவி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டவன் அடி சேர்ந்து
ஆண்டு ஐந்து ஆயிற்று!
ஆனாலும் நாம் அழுகின்றோம்
அம்மா அம்மாவென்று
கண்மணிகளாய் எமை ஆளாக்கிவிட்டு
காற்றோடு போய்விட்டீர்களே!
கண்களில் நிறைந்த நீருடனே- நாம்
கலங்குகின்றோம் அம்மா அம்மாவென்று
பாசத்தோடும் பண்போடும்
எமை பாதுகாத்த எம் தாயே!
விண்ணிலே இருந்தாலும்
எம் சந்ததிக்கு ஒளி விளக்காய்
ஒளி தந்து வழி நடத்துங்கள் அம்மா!
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது எம் நெஞ்சம்...!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்