Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 JUL 1927
இறப்பு 23 JAN 2019
அமரர் கிருஷ்ணபிள்ளை செல்லம்மா
வயது 91
அமரர் கிருஷ்ணபிள்ளை செல்லம்மா 1927 - 2019 காங்கேசன்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். காங்கேசன்துறை தையிட்டியைப் பிறப்பிடமாகவும், நாச்சிமார் கோவிலை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை செல்லம்மா அவர்கள் 23-01-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

பொன்னம்மா, செல்லையா, காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை, சேதுப்பிள்ளை, சின்னத்தங்கம், ஐயாத்துரை மற்றும் புவனேஸ்வரி, செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யோகராஜா(காந்தாமோட்டஸ்), ஆனந்தராஜா(கனடா), செல்வராஜா, சற்குணராஜா(கனடா), சற்குணதேவி(நியூசிலாந்து), தேவராஜா(கிருஷ்ணபிள்ளை அன் சன்ஸ்), நாகராஜா(சுவிஸ்), Dr. மனோகரராஜா(Associate Professor Memorial University of Newfoundland) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காந்தமலர், வசந்தாதேவி, செல்வமலர், றஞ்சிதமலர், சூரியகாந்தன், சகுந்தலாதேவி, சத்தியானந்த சிவமலர், கோமதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கார்த்திக்-ஹர்சினி, சர்மிக், குபர்ணா- விக்னேஸ்வரன், அனித்தா- ஆனந்தகுமார், பிரகாஷ், பிரதீப், அகல்யா- அன்புராஜ், தர்சிகா- மயூரன், பானுசா- ரூபன், நிருஜன் - கானுஜா, பிரசன்னா- திவ்யா, அர்ச்சுனா, தீபிகா, சுகன்ஜா- பாலகிருஷ்ணன், சாருஜா- சகீலன், நிஷானுஜா- உதயகுமார், பிரியங்கா, வித்தகன், வாசவன், ஒவியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

துர்கேஸ், சுஜாஸ், அக்‌ஷயன், அதிசயா, அறீஷ், அன்சிகா, மகிஷா, மாதுஷா, றுஷான், டிலான், பிரிணீஸ், நஜனிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-01-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனோகரராஜா கிருஷ்ணபிள்ளை(மகன்)

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute