யாழ். குரும்பைகட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Walthamstow வை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை சத்தியயோகன் அவர்கள் 13-05-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை(பாலு) மற்றும் புஷ்பலீலாவதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சின்னத்தம்பி மற்றும் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மூத்த மருமகனும்,
பவானி அவர்களின் பாசமிகு கணவரும்,
நிதர்சன், நிவேதன், நிலக்ஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
துஷாரா அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சத்தியநாதன் மற்றும் சத்தியகுமாரி, சத்தியபாமா, சத்தியராஜன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாந்தினி, சாந்தன்(லண்டன்), வசந்தன், காந்தன், வினோதன்(பிரான்ஸ்), பத்மநாதன், அம்பிகா(லண்டன்), காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், இராசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வசித்திரா, சுகந்தி(லண்டன்), ஜெயவதனி, ஜெயகவிதா(பிரான்ஸ்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
நிரோசன், நிரூபன்(லண்டன்), நிலாநேசன், நிசாந்தன்(ஜேர்மனி), நிந்துசன், நிஜந்தி, சாருன்(லண்டன்), பிரசான்(லண்டன்), திருசான், திபாகர், திலக்ஷுகா, நவிலாஷ், அனுஷாரா(பிரான்ஸ்), அஸ்ஷுகன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஹானா(லண்டன்), அஸ்விகன்(லண்டன்), உதயசீலன்(லண்டன்), மிதிலா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.