10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஷ்ணன் விமலா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பத்தாண்டு சென்றாலும்
ஆறாதம்மா எமதுள்ளம்
ஆறாத துயரம் இன்னும்
நெஞ்சில் நீராக நின்றெரியுதம்மா!
பாசமென்றால் எதுவென்று நாமறிய
பண்பில் உயர்ந்து நின்றாய்
நேசமிது தானென்று – எங்கள்
நெஞ்சமதை நெகிழ வைத்தாய்!
அம்மா நாம் மறக்கவில்லை
உம்மை என்றும் நினைப்பதற்கு
ஆறவில்லை நெஞ்சம்
அன்பின் ஈரம் காய்வதற்கு
என்றும் எம் அருகில் இருக்கின்றாய் -
அதனால் ஏங்கவில்லை நாம்
இனிக் காண்போமா என்று
கல்லறை வாழ்வில் நெடுங்காலம் சென்றாலும்
எங்கள் நெஞ்சறைக் கூட்டில் அழியாத
ஓவியம் அம்மா நீங்கள்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute