Clicky

31ம் நாள் நினைவஞ்சலி
பிறப்பு 02 AUG 1973
இறப்பு 28 DEC 2019
அமரர் கிருஸ்ணன் ஜீவாதரன்
யாழ். போதனா வைத்தியசாலை ஊழியர்
வயது 46
அமரர் கிருஸ்ணன் ஜீவாதரன் 1973 - 2019 மட்டுவில் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

 யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கைதடியை வதிவிடமாகவும் கொண்டிருந்த கிருஸ்ணன் ஜீவாதரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

ஆவாரம் பூப்போல அழகான சிரிப்பழகை
தேவாரப் பாடல் போல் இனிப்பான பேச்சழகை
ஆதாரமாய் அனைவருக்கும் அச்சாணியென இருந்த உறவே
சேதாரமாகி ஒரு மாதம் போனதுவோ?

அன்னையவள் உனையிழந்து அலறித் துடிக்கின்றாள்
தென்னை பனை மரங்களும் தென்னவனே
உனையிழந்து வாடுகின்றனவே!
அன்னைமார் தோள் வலியிழந்து தவிக்கின்றோம்
முன்னைப் பழம் வினையோ இங்கு வந்து மூண்டதுவோ
உன்னைப் போல் ஒரு தம்பியை இனி எப்பிறவியில் காண்போமோ?

மட்டுவில் கண்டெடுத்த மரகத மாணிக்கமே!
பட்டுப் போல் தேகமது பட்டுத்தான் போனதுவோ?
தொட்டுத் தழுவியவள் துடிப்பதைப் பாராயோ?
கட்டுடல் காளையே கண்காணாத்
தூரம் போய் மாதம் ஒன்று ஆனதுவோ?

கிருஸ்ணன் பெற்றெடுத்த நான்காம் தமிழ் நீயன்றோ!
துரதிருஸ்டம் செய்தவராகிப் போனோமா?
வருடக் கடைசி வருத்தத்தை தந்ததுவே!
துயரத்தை பிறந்து துடிக்கிறோம் ஜீவா!
உயிரிலும் நினைவிலும் ஒரு மாதமென்ன
எப்போதும் உன் நினைவே தானையா!

நினைவுகலாய் உன் நினைவுகளோடு....
அம்மா, மனைவி, சகோதரர், சகோதரி, உற்றார், உறவினர்.

அன்னாரின் வீட்டுக்கிருத்திய கிரியைகள் 27-01-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத் தொடர்ந்து ஆத்ம சாந்தி பிராத்தனை நடைபெற்று பின்னர் நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

லோகேஸ் - சகோதரன்
நிர்மலா - சகோதரி
சதீஸ் - சகோதரன்

Photos

No Photos

Notices