2ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த கோவிந்தி சின்னத்தங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 10-09-2024
ஆண்டுகள் இரண்டாகியும் ஆறவில்லை
எங்கள் சோகம் தாண்டிப் பல
ஆண்டுகள் போனாலும் மாறாது
உங்கள் பாசம்
கூண்டுப் பறவையாக கூடிநாம் வாழ்வதைக்கண்ட
காலன் தூண்டில் போட்டுக் கவர்ந்தானோ
எங்கள் தெய்வமே!!!
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்,
உன் பாசத்திற்கு நாம் பட்ட கடன் தீராதம்மா!
உந்தன் உடல் மட்டும் தான் பிரிந்து போனது
உங்கள் நினைவுகள் என்றும்
எங்கள் உயிர் உள்ள வரை வாழுமம்மா?
உங்கள் பிரிவால் வாடும் கணவன், பிள்ளைகள்
மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்