திதி:31/01/2026
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், வேலணை 1ம் வட்டாரம் மணியகாரன் வீட்டடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குழந்தைவேலு மார்க்கண்டு அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
இறப்பு :
06 Feb, 2001
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மனோன்மணி மார்க்கண்டு அவர்களின் 29ம் ஆண்டு நினைவஞ்சலி.
இறப்பு :
14 Mar, 1997
நீங்கள் இருவரும் எம்மை விட்டுப் பிரிந்து
இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டதனை
எம்மால் நம்பமுடியவில்லை!
எங்களை எல்லாம் அன்பாலும்
பண்பாலும் அரவணைத்து வழி
நடத்திய அந்த நாட்கள்
எம்மைவிட்டு நீண்டதூரம்
சென்றாலும் உங்கள்
அறிவுரைகள், அரவணைப்புகள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில்
உயிர் வாழும் அப்பா, அம்மா!
ஆயிரம் உறவுகள் இருந்தென்ன!
பலகோடி இன்பங்கள் இருந்தென்ன!
உங்கள் அன்பிற்கும் இழப்பிற்கும்
நிகருண்டோ இவ்வுலகில் அப்பா, அம்மா!
அப்பா,அம்மா என்ற சொல்லுக்கு
நீங்களே இலக்கணம்..!
எங்கள் துயரம் விதித்ததோர் விதியதால்
விண்ணகம் சென்றதைப்
பொறுத்திட முடியுமோ தான்?
அப்பா,அம்மா உங்கள் அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்!
பாசத்தின் பிறப்பிடமாய் பாரினிலே!
நேசத்துடன் எங்களை ஆளாக்கி
நேர்மையுடன் வாழ்ந்தீர்களே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
என்றும் இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!