யாழ். கரவெட்டி கிழக்கு செங்குந்தர்வீதியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கோகனகதேவி கந்தசாமி அவர்களின் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திகை அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திகை 08-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று 127 Blenheim Road Northolt UB5 4TT எனும் முகவரியில் நடைபெறும். இந் நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
It is never easy to lose someone we care about, but know that their memory will always live on in our hearts as we fondly remember all the special moments shared together.