
யாழ். கைதடி நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிட்டினர் நாகராசா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் பாச ஒளிவிளக்கே, எம் தோட்டத்து வாசமலரே
அன்பின் உருவான அப்பாவே
மூன்று ஆண்டுகள் முடிந்தாலும் உங்கள் முகம்
எங்கள் நெஞ்சை விட்டு அகலவில்லை அப்பா
காலங்கள் போனாலும் எங்கள் காயங்கள் ஆறவில்லை
பாசமாய் எங்களை கண்மணியாய் பார்த்தீர்களே
ஆசையாய் நீங்கள் வீடுவருவீர்கள் என்று
ஆவலாய் நாங்களும் காத்திருந்தோம்
பாதியில் எங்களை தவிக்கவிட்டு வாய்மூடி சென்றதென்ன?
நோயின் பிடியெல்லாம் நீங்கி, நெஞ்சமெல்லாம் நாம் பூரிப்போடு இருக்க
மாலையில் வந்தசேதி கேட்டு நாம் கதி கலங்கி நின்றோமப்பா
உங்கள் இறுதிமூச்சு நின்றோட இன்றளவும் நம்பமுடியவில்லை
நீங்கள் இல்லாத வாழ்க்கையை
காலங்கள் போகலாம், காயங்கள் மாறலாம்
நெஞ்சினில் உள்ள உங்கள் நினைவுகள்
என்றும் நம்மைவிட்டு போகாது
உங்கள் நினைவினை காலமெல்லாம் நாங்கள்
நெஞ்சினிலே சுமந்து நிற்போம்.
"நெஞ்சிருக்கும் வரை உங்கள் நினைவிருக்கும்"