Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 16 MAR 1938
இறப்பு 21 JAN 2020
அமரர் கிருஷ்ணபிள்ளை குணசேகரம்பிள்ளை
வயது 81
அமரர் கிருஷ்ணபிள்ளை குணசேகரம்பிள்ளை 1938 - 2020 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். உடுப்பிட்டி  கம்பர் மலையைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிக்குளம் 2ம் பண்ணை முகத்தான்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை குணசேகரம்பிள்ளை அவர்கள் 21-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் பாசமிகு மகனும், சிவப்பிரகாசம் லெச்சுமிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற அன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

குணரஞ்சிதமலர்(இலங்கை), அருந்தவராசா(கனடா), நிர்மலா(கனடா), மஞ்சுளா(கனடா), சியாமளா(இலங்கை), கெளசலா(கனடா), குணராசா(கனடா), பரிமளா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற வரதகாந்தன்(இலங்கை), அருந்ததி(கனடா), யோகரட்ணம்(கனடா), காலஞ்சென்ற கந்தசாமி(கனடா), பாலகிருஷ்ணன்(இலங்கை), ஸ்ரீதரன்(கனடா), சுகிர்தா(கனடா), வரதராசா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற அன்னலட்சுமி, கெங்கேஸ்வரன், நவரத்தினராசா(2ம் பண்ணை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற செல்லத்துரை, சரஸ்வதி, இராசம்மா, அழகம்மா, செல்லம்மா, மதனலீலா(2ம் பண்ணை), இராஜேஸ்வரி(உடுப்பிட்டி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்ற சீவரத்தினம், இராசையா, சிவகுரு, சுந்தரலிங்கம்(உடுப்பிட்டி) ஆகியோரின் பாசமிகு சகலனும்,

கிருபானந்தன்(வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர்- இலங்கை), நிமலானந்தன்(கனடா), உலகானந்தன்(அவுஸ்திரேலியா), பிரியா(லண்டன்), டிலீசன்(கனடா), ஜனனி(கனடா), யுகந்தினி(கனடா), ஜெயந்தினி(கனடா), கீர்த்தினி(கனடா), ஸ்ரீபானு(இலங்கை), துசியந்தன்(இலங்கை), கிரிசாந்தி(இலங்கை), லக்சாயினி(கனடா), தாரணி(கனடா), அபிசன்(கனடா), ரணுஸ்க்கா(கனடா), ரஸ்வின்(கனடா), சஜிதன்(கனடா), நிவேதா(கனடா), சேவிக்கா(கனடா), கரணி(கனடா), திரிசன்(ஜேர்மனி), சைலஜன்(ஜேர்மனி),  லலூஜன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

திகாஷ்(இலங்கை), அபினேஷ்(இலங்கை), சைலன்(கனடா), அந்துசன்(அவுஸ்திரேலியா), கிஷாணன்(லண்டன்), கிருஷன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கங்கன்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Thu, 20 Feb, 2020