Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 31 JUL 1934
மறைவு 26 OCT 2023
அமரர் கிருஸ்ணபிள்ளை வேலுப்பிள்ளை
வயது 89
அமரர் கிருஸ்ணபிள்ளை வேலுப்பிள்ளை 1934 - 2023 பட்டிக்குடியிருப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

வவுனியா நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு நட்டாங்கண்டல் மாங்குளமை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை கிருஸ்ணபிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 13-11-2024 ஐப்பசி பூர்வபட்ச திரியோதசி

முதலாம் ஆண்டு நினைவு நாள் வந்ததோ..!
ஒவ்வொரு நிமிடமும் உன் நினைவுதான் அப்பா!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் - அப்பா
என அழைப்பதற்கு நீங்கள் இல்லையே அப்பா!

கனகாலம் எம்மோடு கரிசனையாய்
வாழ்வீர்கள் என்று நம்பி இருந்தோம்!
கணப்பொழுதினில் வந்த செய்தி
எங்களை எல்லாம் கதி கலங்க வைத்ததப்பா!

உலகை விட்டுப் பிரிந்தாலும் - உங்கள்
நினைவு எங்கள் நெஞ்சில் தான் குடியிருக்கும்
உறவை விட்டுப் பிரிந்தாலும் - உயிரே
எங்கள் உயிர்மூச்சும் உம்மோடு தான் இருக்கும்..

நிழல் போலத் தொடர்ந்து வந்த அன்பே!
உணர்வோடு கலந்த உயிர்மூச்சை
உள்ளடக்கி கண்ணீரை காணிக்கையாக்குகிறோம்..!

உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos