மட்டக்களப்பு செங்கலடியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு நகரை வதிவிடமாகவும் கொண்ட கிரிஜா ஜெயகாந்த் அவர்கள் 16-12-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, நிர்மலா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற குகநேசபாலன்(குகனபாலா), செல்வநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
Dr. ஜெயகாந்த்(கண் சத்திர சிகிச்சை நிபுணர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஆத்மிகா, ஆருத், அத்வைதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிரியா, செந்தூரன், ஜெயமாலா, விக்ன தர்சினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெகதாபரன், தேவமுரளி, ஜெயரதி, சஞ்சீவ், குமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சேஷ்ணு அவர்களின் பாசமிகு சித்தியும்,
அக்ஷவி அவர்களின் பாசமிகு பெரியம்மாவும்,
சாரவ் அவர்களின் அன்பு அத்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.