நிழல்போல் இருந்தவன் நீ நினைவாய் மாறினாய்...! கண் இமைக்கும் நேரத்தில் கண்ணீர் துளியாகினாய்...!! இதயங்களெல்லாம் நொறுங்க, இமைகளெல்லாம் நனைய, எங்களை தவிக்கவிட்டு எங்கோ நீ பயணமானாய்...!! நோயோடு வந்திருந்தால் நொந்திடோமே காலன் சாவெடுத்து போனானே நண்பா சாகின்ற வயதா உனக்கு சாதிக்கும் வயது சாந்தியாய் போனது ஏன் நண்பா...? அன்று முதல் இன்று வரை - என்றும் உன்முகம் வாடியதில்லை உன்னோடு பேசியவர் உள்ளம் - என்றும் துன்முகத்தை நாடியதில்லை - இன்று மூடிவைத்து உன்முகத்தை நாங்கள் கூடிவந்து கொண்டு செல்லும் கொடிய நிலை ஏன் நண்பா...? என்றும் நட்பின் பாவெடுத்து பாடி நிற்கிறோம் அன்பின் பூவெடுத்து போற்றி நிற்கிறோம் நலன்கள் பல செய்து நாங்கள் என்றும் வேண்டுகிறோம் நண்பா கீர்த்தி!!!! உன் சாந்தி என்றும் நலமாக அமையட்டும் சாந்தி சாந்தி சாந்தி..
மாலா அக்காவின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுமானங்கள்.